"மனிதர்களின் இருப்பை விட மனிதர்களின் செயற்பாடே போராட்ட வரலாற்றின் சக்கரத்தைச் சுழற்றுகின்றது"

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதன் முதற்கட்ட தீர்ப்பு சட்டத்திற்கு முரணானது என்று அறிவித்திருந்த நிலையில், இரண்டாவது கட்ட தீர்ப்பு 90 நாட்களுக்குள் தடை தொடர்பாக மறுபரிசீலனை செய்யுமாறு மாண்புமிகு உள்துறை அமைச்சர் பிரீத்தி படேல் அவர்களின் பரிசீலனைக்கு வந்துள்ளது. தீர்வினை நோக்கிப் பயணிக்கும் நாம், தீர்ப்பினை எமக்கான தீர்வாக மாற்ற வேண்டியது பிரித்தானியா வாழ் தமிழர்கள் ஒவ்வொருவரினதும் கைகளில் தான் தங்கியுள்ளது.

தீர்வினை நமதாக்க நாங்கள் செய்ய வேண்டிய செயற்பாடு மிகவும் எளிதானது.
நாங்கள் வாழும் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கீழே இணைப்பில் உள்ள மின்மடல் ஊடாக அழுத்தம் கொடுப்பதன் மூலம் தீர்வை நோக்கி பயணிக்க வழியமைக்கும் .
நாம் சட்டத்தின் மூலம் பெற்ற வெற்றியை....
நாமே அரசியல் வெற்றியாக மாற்றுவோம்!

உங்கள் செயலுக்கான அழைப்பு

   2018ம் ஆண்டு பிரித்தானியாவில் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளை நீக்கும்படி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மனு மூலம் விண்ணப்பித்திருந்தது. அந்நேரம் துரதிஷ்டவசமாக மேலும் தடையைத் தொடர உள்துறை அமைச்சகம் தீர்மானித்தது.

 

 அதனைத்தொடர்ந்து தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் மேல்முறையீட்டு ஆணையத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மேல்முறையீடு செய்திருந்தது. அப்போதைய உள்துறை அமைச்சு தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் நீடிப்பதற்கு முடிவெடுத்தது. அவ்வேளையில் தடைசெய்யப்பட்ட அமைப்புகள் மேல்முறையீட்டு ஆணையத்தின் வல்லுநர் குழு தடை மீளாய்வு குறித்து முடிவு ஒன்றை எடுத்திருந்தது. அவ்முடிவானது தமிழீழ விடுதலைப் புலிகளின் தடை என்பது அடிப்படை சட்ட வரையறைகளுக்கு முரணானது என்பதை விசேட தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியிருந்தது.

 

 அமைச்சரின் பணிந்துரை கூட்டுப் பயங்கரவாதப் பகுப்பாய்வு மையத்தின் (JTAC) கருத்துகளைத் துல்லியமாகச் சரியாக சுருக்கித் தரவில்லை என்றும் தடைசெய்யப்பட்ட அமைப்புகள் மேல்முறையீட்டு ஆணையம் கண்டறிந்தது. இந்தச் செய்திகள் “மிக துல்லியமாக கவனிக்கப்பட வேண்டியவை” என்று ஆணையம் கருதியது. ஆகவே தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் நீடித்து வைத்துக் கொள்ளும் முடிவு பிழையானது என்று தீர்ப்பளித்தது.

 

  நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மேல்முறையீடு வெற்றி பெற்றது என்பது உங்களில் பெரும்பாலானவர்கள் அறிந்த விடயமே. இந்த வெற்றி படியின் அடுத்தகட்டமாக, உள்துறை அமைச்சரின் மூல முடிவு நீக்கம் செய்யப்பட்ட போது தடைநீக்க விண்ணப்பத்தை மீளாய்வு செய்யக் கால அவகாசம் தருமாறு அமைச்சர் மேல்முறையீட்டு ஆணையத்தை வேண்டிக் கொண்டார். மேல்முறையீட்டு ஆணையம் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடைநீக்கம் செய்யக் கோரும் விண்ணப்பத்தை மீளாய்வு செய்வேன் என்ற உள்துறை அமைச்சரின் உறுதிமொழியை பிப்ரவரி 18ஆம் நாள் ஏற்றுக்கொண்டது.

 

  விரைவாக நாம் செய்யவேண்டிய செயல்பாடு என்ன? 

 

 மாண்புமிகு உள்துறை அமைச்சர் பிரீத்தி படேல் அவர்களிடம் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதற்கான கோரிக்கையை முன் வைப்போம். தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது நமக்கான தீர்வு இன்னும் கிடைக்கவில்லை. தீர்வினை நமதாக்கிக்கொள்வது ஒவ்வொரு பிரித்தானிய வாழ் தமிழர்களின் கையில் தான் தங்கியுள்ளது. இதற்கு உங்கள் ஆதரவும் செயல்பாடும் மிகவும் முக்கியமானது.

 

 நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குமாறு கோரி உள்துறை அமைச்சுக்கு கடிதம் மூலம் எழுதுமாறு உங்கள் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மின்மடல் மூலமாக தொடர்பு கொண்டு வேண்டுகோள் விடுப்பதற்கு இந்த கீழேயுள்ள இணையப்பொறி முறையினை பயன்படுத்திக்கொள்ளலாம்.

நீங்கள் செய்யவேண்டியது…….

 

  • இணைப்பை அழுத்திய உடன் திரையில் தோன்றும் பெட்டியில் உங்கள் முகவரி அஞ்சல் குறியீட்டைப் (UK Residing Address Post Code) பதியுங்கள், உங்கள் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் பெயர் மற்றும் மின்னஞ்சல் விபரம் காண்பிக்கபடும்.
  • அவருக்கு மின்னஞ்சல் அனுபவதற்கான பெட்டியில் உங்கள் முழுப்பெயரையும் முகவரியையும் கொடுத்து “Submit” செய்வதன் மூலம் உங்களுடைய மின்னஞ்சல் உங்கள் பாராளுமன்ற உறுப்பினருக்கு சென்றடையும்.
  • மேலதிக உதவி தேவையெனில் எம்மை தொலைபேசி எண் – 07926899145 அல்லது மின்னஞ்சல் – adminuk@tgte.org தொடர்புகொள்ளுங்கள்.
தமிழர் தலைவிதியை தீர்மானிக்க நீங்கள் செலவிடுவது ஒரு நிமிடம் மட்டுமே

எப்படி உங்கள் தொகுதி பாராளுமன்ற உறுப்பினருக்கு மின்னஞ்சல் அனுப்புவது?

OUR LEGAL TEAM

PROJECT BOOKLETS AND DOCUMENTS

The booklet contains a brief details of TGTE, Political Projects and Tamil Liberation struggle from 1948 to 2020.
The booklet contains a brief details of the UK Litigation Project.
The document contains a brief details of POAC - OPEN - Judgment - 21.10.2020
The document contains a brief details of POAC - Judgment - 18.02.2021.

Gallery

பிரித்தானியாவில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான வழக்கின் இரண்டாம் கட்ட தீர்ப்பு - ஊடக சந்திப்பு
பிரித்தானியாவில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான வழக்கின் முதலாம் கட்ட தீர்ப்பு - ஊடக சந்திப்பு
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கம் தொடர்பாக உலக பிரசித்தி பெற்ற அறிஞர் Prof. Conor Gearty அவர்களின் கருத்துப் பகிர்வு
தொடர்புகளுக்கு
தொலைபேசி எண் - 07926899145 | மின்னஞ்சல் - adminuk@tgte.org